/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.20 கோடி கடன் உதவி
/
சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.20 கோடி கடன் உதவி
ADDED : ஆக 29, 2024 10:01 PM
கோத்தகிரி: நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கட்டபெட்டு கிளையில், கக்குச்சி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள, 12 சுய உதவிக் குழுக்களுக்கு, 1.20 கோடி ரூபாய் கடனுக்கான அனுமதி ஆணை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் தயாளன், சுய உதவி குழுக்களுக்கு கடனுக்கான ஆணை வழங்கி பேசியதாவது:
வங்க தேசத்தில் தற்காலிக பிரதமராக பொறுப்பு ஏற்றிருக்கும் பொருளாதார அறிஞரான முகமது யூனுஸ் என்பவர், வங்கதேசத்தில் மகளிருக்கு சிறு கடன்கள் வழங்குவதை அறிமுகப்படுத்தினார்.
இந்த நடைமுறை உலக அளவில் பிரபலம் அடைந்து, பல்வேறு நாடுகளில் பின்பற்றப்பட்டு, வெற்றிகரமாக செயல்பட்டு வந்ததால், அவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது.
மகளிருக்கு சிறுகடன்கள் வழங்கும் முறை, தமிழகத்தில் முதல்முறையாக, தர்மபுரி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. மகளிர் சுய உதவி குழுவினர் லட்சக்கணக்கில் பெருகி, அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி வருகின்றனர்.
மகளிருக்கு நம் நாட்டின் பொருளாதாரத்தில் பங்களிப்பு என்ற அரசின் குறிக்கோள், வெற்றி பெற்றுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் (பொ) அய்யனார், கட்டபெட்டு வங்கி கிளை மேலாளர் பீமன், கக்குச்சி ஊராட்சி அளவிலான ஒருங்கிணைப்பாளர் சுமதி உட்பட பலர் பங்கேற்றனர்.

