/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நகர சாலையோரம் முளைத்த காளான்கள் வியப்பில் உள்ளூர் மக்கள்
/
நகர சாலையோரம் முளைத்த காளான்கள் வியப்பில் உள்ளூர் மக்கள்
நகர சாலையோரம் முளைத்த காளான்கள் வியப்பில் உள்ளூர் மக்கள்
நகர சாலையோரம் முளைத்த காளான்கள் வியப்பில் உள்ளூர் மக்கள்
ADDED : மே 23, 2024 11:42 PM

கூடலுார்:கூடலுார் மைசூரு தேசிய நெடுஞ்சாலை, புதிய கோர்ட் எதிரே முளைத்துள்ள காளான்கள் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கூடலுார் பகுதியில் கடந்த வாரம் முதல் தொடர்ச்சியாக கோடை மழை பெய்து வருகிறது. அவ்வப்போது இடி, மின்னலும் ஏற்படுகிறது.
இந்த காலநிலை மாற்றத்தால், வனப்பகுதிகளில் பலவகை காளான்கள் முளைக்க துவங்கியுள்ளன. வனத்தை ஒட்டிய கிராம மக்கள் அவைகளைப் பார்த்து ரசித்து வருகின்றனர்.
சிலவகை காளான்களை பழங்குடியினர் சேகரித்து சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மைசூரு தேசிய நெடுஞ்சாலை, புதிய கோர்ட் எதிரே உள்ள, பர்னிச்சர் வேலை செய்யும் கடையின் முன், திடீரென காளான்கள் முளைத்துள்ளன. வெண்மையான கலரில் குடை போன்ற தென்பட்ட அதன் அழகை, அவ்வழியாக செல்பவர்கள் வியந்து ரசித்து செல்கின்றனர்.
மக்கள் கூறுகையில், 'கூடலுார் வனப்பகுதியில் பருவமழை காலத்தில் காய்ந்த மரங்களில் காளான்கள் முளைத்திருப்பதை பார்க்க முடியும். தற்போது நகரப்பகுதி ஒட்டிய பகுதியில் காளான்கள் முளைத்திருப்பது வியப்பை ஏற்படுத்துள்ளது,' என்றனர்.