/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் லோக் அதாலத்; 917 வழக்குகளுக்கு தீர்வு
/
நீலகிரியில் லோக் அதாலத்; 917 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : செப் 15, 2024 11:31 PM
ஊட்டி : நீலகிரியில் நடந்த லோக் அதாலத்தில், 917 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
கோர்ட்டில் வழக்குகள் அதிகமாக தேங்குவதை தவிர்க்கவும், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணவும், சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மற்றும் மாநில அளவிலான லோக் அதாலத் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, ஊட்டியில் தேசிய அளவிலான லோக் அதாலத், நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான அப்துல் காதர் தலைமையில் நடந்தது. இதேபோல், குன்னுார், கூடலுார், பந்தலுார், கோத்தகிரி ஆகிய கோர்ட்களில் லோக் அதாலத் நடந்தது.
அதில், 'நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை மோசடி, மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், வங்கி வழக்குகள், வாரா கடன் வழக்குகள், குடும்ப பிரச்னை சம்பந்தமான வழக்குகள்,'என, 2,248 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில், 7 கோடி 30 லட்சத்து 60 ஆயிரத்து 844 ரூபாய் மதிப்பிலான, 917 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.