/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குருத்துகுளி கொள்முதல் மையத்திற்கு லாரி 'கட்'
/
குருத்துகுளி கொள்முதல் மையத்திற்கு லாரி 'கட்'
ADDED : ஏப் 09, 2024 09:14 PM
ஊட்டி;ஊட்டி அருகே நஞ்சநாடு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில், நஞ்சநாடு, குருத்துகுளி, மேல்கவ்வட்டி, கீழ் கவ்வட்டி கிராமங்களை சேர்ந்த, 600க்கு மேற்பட்டவர்கள் அங்கத்தினர்களாக உள்ளனர்.
தங்களது தோட்டத்தில் பறிக்கும் பசுந்தேயிலைகளை அந்தந்த கொள்முதல் மையங்கள் மூலம் தொழிற்சாலைக்கு வினியோகித்து வருகின்றனர். குருத்துகுளி பகுதியில், 140 அங்கத்தினர்கள் நஞ்சநாடு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை வினியோகித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக குருத்துகுளி கொள்முதல் மையத்திற்கு இலைகளை எடுக்க லாரி சரிவர வருவதில்லை.
இதனால், அப்பகுதி அங்கத்தினர்கள் தனியார் ஏஜன்ட்களிடம் இலைகளை வழங்குவதால் தொழிற்சாலைக்கு இலை வரத்து குறைந் துள்ளது.

