ADDED : மே 24, 2026 05:30 PM
குன்னூர்:
குன்னூரில் மாம்பழ கண்காட்சி துவங்கியது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனில் தோட்டக்கலை துறை சார்பில், ஊட்டியில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி குன்னூர் காட்டேரி பூங்காவில் மலைப்பயிர்கள் கண்காட்சி நடந்தன.
இம்மாதம், 27 முதல் 30 வரை சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி நடக்கிறது.
இதே போல், தனியார் அமைப்பினரும் கண்காட்சி மற்றும் முகாம்கள் நடத்துகின்றனர். குன்னூர் புளூ ஹில்ஸ் பகுதியில், கொக்கோடீ கலேரியா தனியார் அமைப்பு சார்பில் நீலகிரி மாங்கனி திருவிழா என்ற தலைப்பில் மாம்பழ கண்காட்சி நேற்று துவங்கியது. 3 நாட்கள் நடக்கிறது.
இதில், ருமினியா, செந்தூரம் அல்போன்சா, சக்கரகட்டி, உட்பட 17 வகையான மாம்பழங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாம்பழங்களின் மேங்கோ பாயாசம் மற்றும் மேங்கோ பீட்சா, மேங்கோ கேக்ஸ் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை உள்ளூர் மக்கள் சுற்றுலாப் பயணிகளும் கண்டு ரசித்து செல்கின்றனர்.
