ADDED : ஏப் 23, 2024 10:24 PM

அன்னுார் : அன்னுார் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழாவில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
அன்னுாரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் 34ம் ஆண்டு பூச்சாட்டு திருவிழா கடந்த 9ம் தேதி துவங்கியது
கடந்த 16ம் தேதி மாலையில் காப்பு கட்டுதலும், கம்பம் நடுதலும், பூவோடு எடுத்தலும் நடந்தது.
தொடர்ந்து 21ம் தேதி வரை, தினமும் இரவு பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடுதலும், பூவோடு எடுக்கும் நிகழ்ச்சியும், அம்மனுக்கு சிறப்பு வழிபாடும் நடந்தது.
நேற்று முன்தினம் காலை அபிஷேக ஆராதனையும், மாலையில் பக்தர்கள் அணிக்கூடை எடுத்து வருதலும் நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு, சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பெண்களுக்கு மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது. அன்னதானம் அளிக்கப்பட்டது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து பஜனை, சென்டை மேளத்துடன், அம்மன் திருவீதி உலா நடந்தது. இன்று (24ம் தேதி) பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஊர்வலம், பக்தர்கள் பறவை காவடி மற்றும் தேரை, அலகு குத்தி இழுத்து வரும் வைபவம் நடக்கிறது.
இரவு பக்தி சொற்பொழிவு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

