/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் மினி பஸ்கள் மார்ச் 15க்குள் விண்ணப்பிக்கலாம் நீலகிரியில் 8 வழித்தடத்தில் மினி பஸ்கள் மார்ச் 15 க்குள் விண்ணப்பிக்கலாம் மார்ச் 15 க்குள் விண்ணப்பிக்கலாம்

ADDED : பிப் 27, 2025 03:22 AM
ஊட்டி,: நீலகிரி மாவட்டத்தில் எட்டு வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க அனுமதி வழங்கப்படுகிறது.
கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை:
நீலகிரியில் போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட, 16 புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க அனுமதி அளிக்கப்படுவது குறித்து, கடந்த, 17ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தற்போது, புதியதாக, 8 வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க அனுமதி வழங்கப்பட உள்ளது.
அதில், 'படைச்சேரி முதல் சேரம்பாடி; தர்மகிரி முதல் அல்லுார்; கூடலுார் முதல் மூன்றாவது டிவிஷன்; கூடலுார் முதல் பழம் வயல்; கப்பச்சி முதல் கட்டபெட்டு; கொட்டக் கம்பை முதல் காக்கா குண்டு; கீழ் கோத்தகிரி முதல் குளங்கரை; ஊட்டி ஏ.டி.சி.,முதல் துானேரி,' ஆகிய, 8 வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழித்தடங்களில் மினி பஸ் இயக்க விரும்புவோர் ஊட்டியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மார்ச்,15 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
ஒரு வழித்தடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும் பட்சத்தில், குலுக்கல் முறையில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.