/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இடம் மாறிய சிறுத்தை கண்காணிப்பு அவசியம்
/
இடம் மாறிய சிறுத்தை கண்காணிப்பு அவசியம்
ADDED : ஆக 19, 2024 01:41 AM
குன்னுார்;குன்னுார் அருகே அருவங்காடு பாலாஜி நகர், ஆரோக்கியபுரம், கிடங்கு உட்பட சுற்றுப்புற பகுதிகளில் உலா வரும் சிறுத்தை, குடியிருப்பு பகுதிகளில், 6 வளர்ப்பு நாய்கள் மற்றும் இரு பூனைகளை வேட்டையாடி சென்றது.
சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள்விட கட்டப்பெட்டு வனத்துறை ஊழியர்களிடம் மக்கள் வலியுறுத்திய நிலையில், வெலிங்டன் கே.வி., பள்ளி, பாலாஜி நகர் உட்பட, 3 இடங்களில் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பாலாஜி நகர் அருகில் உள்ள கலைமகள் பகுதிக்கு சிறுத்தை வந்தது. இங்கு வளர்ப்பு நாயை வேட்டையாட முயற்சித்தது.
வீட்டில் இருந்தவர்கள் சப்தமிட்டதால் சிறுத்தை அதே இடத்தில் நாயை விட்டு சென்றது. நாய்க்கு கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இப்பகுதியில் வனத்துறையின் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

