/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் உள்ளூர் பக்தர்கள் பரவசம்
/
முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் உள்ளூர் பக்தர்கள் பரவசம்
முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் உள்ளூர் பக்தர்கள் பரவசம்
முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் உள்ளூர் பக்தர்கள் பரவசம்
ADDED : மார் 22, 2024 10:04 PM

பந்தலுார்;பந்தலுார் அருகே தேவாலா பகுதியில் உள்ள மகா ஸ்ரீ சக்தி முனீஸ்வரன் ஆலய கும்பாபிஷேக விழா கடந்த, 20 ஆம் தேதி மாலை, 5:00 மணிக்கு சுத்தி புண்யாஹம், சுதர்சன ஹோமம், பகவதி சேவை பூஜையுடன் துவங்கியது.
தொடர்ந்து, மறுநாள் கணபதி, காயத்ரி ஹோமம், மத்திய கால பூஜை மற்றும் பகவதி சேவை, தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.
நேற்று காலை சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கோழிக்கோடு கண்ணாடி இல்லத்து ஸ்ரீ சம்பு நம்பூதிரி தலைமையிலான குழுவினர், முனீஸ்வரர் பிரதிஷ்டை பூஜை மற்றும் கும்பாபிஷேக பூஜைகளை நடத்தினர்.
அதில், பந்தலுார் மற்றும் தேவாலா சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் பங்கேற்றனர்.
பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தலைவர் தனஜெயன், கவுரவ ஆலோசகர் ஹரிஹரன், செயலாளர் பிஜூ, பொருளாளர் மோகன் தலைமையிலான கோவில் கமிட்டியினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.