/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ராணுவ மைய அருங்காட்சியகம் பார்வையிட்ட என்.சி.சி., மாணவியர்
/
ராணுவ மைய அருங்காட்சியகம் பார்வையிட்ட என்.சி.சி., மாணவியர்
ராணுவ மைய அருங்காட்சியகம் பார்வையிட்ட என்.சி.சி., மாணவியர்
ராணுவ மைய அருங்காட்சியகம் பார்வையிட்ட என்.சி.சி., மாணவியர்
ADDED : மே 21, 2024 12:13 AM

குன்னுார்:நீலகிரியில் நடந்து வரும் தேசிய என்.சி.சி., மலையேற்ற பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவியர், வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் கேத்தி சி.எஸ்.ஐ.. கல்லுாரி, ஊட்டி சி.எஸ்.ஐ., பள்ளி, நஞ்சநாடு ஏகலைவா பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான தேசிய என்.சி.சி., மலையேற்ற பயிற்சி முகாம் கடந்த, 6ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்ச தீவ், கோவா, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து இரு பிரிவுகளாக மாணவியர் பங்கேற்றுஉள்ளனர்.
கடந்த 16ம் தேதியில் துவங்கி, 23ம் தேதி வரை நடந்து வரும், 2வது குழுவினர் மலையேற்ற பயிற்சியில், தினமும் 15 கி.மீ., துாரம் நடை பயணம் மேற்கொள்வதுடன் ரயிலில் பயணம் செய்தனர்.
மேலும், குன்னுார் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரின் (எம்.ஆர்.சி.,) அருங்காட்சியகத்தை பார்வையிட்டு, இந்திய போர் வரலாறு மற்றும் ராணுவ தளவாடங்களின் பயன்பாடுகள் குறித்து அறிந்து கொண்டனர்.
அருங்காட்சியக வளாகத்தில் அனைவரும் 'குரூப் போட்டோ' எடுத்து கொண்டனர்.
மேலும், முத்தொரை வானொலி ஆராய்ச்சி மையம், ரோஜா பூங்கா, பட்டுபண்ணை, எம்.ஆர்.சி., மியூசியம், சிம்ஸ் பார்க் உட்பட பழங்குடியின கிராமங்களில், மலையேற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேத்தி சி.எஸ்.ஐ.. கல்லுாரியில் இன்று நடக்கும் சிறப்பு கலந்துரையாடல் அமர்வு நிகழ்ச்சியில், என்.சி.சி.. கமாண்டர் அதுல் குமார் ரஸ்தோகி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
ஏற்பாடுகளை கோவை என்.சி.சி., தலைமையக கமாண்டிங் குழுவினர் செய்து வருகின்றனர்.

