/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புதிய கல்வியாண்டு: பள்ளிகள் 'பளிச்'
/
புதிய கல்வியாண்டு: பள்ளிகள் 'பளிச்'
ADDED : மே 31, 2024 10:45 PM

மேட்டுப்பாளையம்:ஜூன் 10ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இதையடுத்து, அரசு பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், 'கடந்த ஒரு மாதமாக மாணவர்கள் நடமாட்டம் இல்லாததாலும், அண்மையில் பெய்த மழை காரணமாகவும் செடிகள், புற்கள் வளர்ந்துள்ளன.
வகுப்பறைகள் பூட்டி வைக்கப்பட்டிருந்ததால் குப்பை இல்லை. ஆனாலும், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்படுகின்றன. அதே போல் பள்ளி வளாகங்களில் உள்ள செடிகள், கொடிகள் வெட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது' என்றனர்.
காரமடை அருகே புஜங்கனூரில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியர் அறைக்கு எதிரில் உள்ள கட்டடம் பழுதடைந்து, உபயோகப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த கட்டடத்தின் மேல் பகுதியில் செடிகள் வளர்ந்துள்ளன. இந்த கட்டடத்தை தென் மேற்கு பருவமழைக்கு முன்பாக இடித்து அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி கூறுகையில், ''கட்டடம் தற்போது பயன்பாட்டில் இல்லை.
இக்கட்டடத்தை இடிக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை கடிதம், பள்ளியின் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இக்கட்டடம் இடிக்கப்படும்,'' என்றார்.

