/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கேரளாவில் 'நிபா' வைரஸ் பாதிப்பு; மாநில எல்லையில் பரிசோதனை
/
கேரளாவில் 'நிபா' வைரஸ் பாதிப்பு; மாநில எல்லையில் பரிசோதனை
கேரளாவில் 'நிபா' வைரஸ் பாதிப்பு; மாநில எல்லையில் பரிசோதனை
கேரளாவில் 'நிபா' வைரஸ் பாதிப்பு; மாநில எல்லையில் பரிசோதனை
ADDED : செப் 17, 2024 09:59 PM

கூடலுார் : கேரளாவில் 'நிபா' வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம், கூடலுாரை ஒட்டிய மாநில எல்லைகளில் சுகாதார துறையினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த இளைஞர் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, நோய் பரவலை தடுக்க, கேரளா சுகாதாரத் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், நிபா வைரஸ் தமிழகத்தில் பரவலை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக சுகாதார துறையினர், தமிழக- கேரளா எல்லைகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர். கூடலுார் அருகே, தமிழக - கேரள எல்லையை ஒட்டிய நாடுகாணி, சோலாடி, தாளூர், பாட்டவயல் உள்ளிட்ட சோதனை சாவடிகளில், சுகாதாரத்துறை ஊழியர்கள் முகாமிட்டுள்ளனர். கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்து, நிபா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து, தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரம் வழங்கி பின் நீலகிரிக்குள் அனுமதித்து வருகின்றனர்.
சுகாதார துறையினர் கூறுகையில், 'கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, நீலகிரிக்கு வருபவர்களை, மாநில எல்லையில் சுகாதார துறையினர் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின் அனுமதித்து வருகிறோம்.
பரிசோதனையில், காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படும்,' என்றனர்.