/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் பிரசவத்தின் போது தாய், சேய் இறப்பு இல்லை; கூடலுாரில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் தகவல்

ADDED : மார் 04, 2025 11:20 PM

கூடலுார்; ''நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டு பிரசவத்தின் போது தாய், சேய் இறப்பு இல்லை,'' என, எம்.பி., ராஜா தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் நாடார் திருமண மண்டபத்தில், சமூக நலன் மகளிர் உரிமை துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா நேற்று, நடந்தது.மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்து பேசினார்.
விழாவில், நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கி பேசுகையில், ''தமிழகத்தில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் ஆரோக்கியத்தை பாதுகாக்க அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிரசவத்தின் போது தாய், குழந்தைகள் பாதிக்கப்படுவதை தடுக்க ஒவ்வொரு மாதமும் செவிலியர்கள், அவர்களின் உடல் ஆரோக்கியத்தை கண்காணித்து வருகின்றனர். இதன் மூலம் நீலகிரியில், நடப்பு ஆண்டு பிரசவத்தின் போது தாய், சேய் இறப்பு என்பது இல்லை. மாவட்டத்தின் சுகாதாரக் குறியீடு உயர்ந்துள்ளது,'' என்றார்.
தொடர்ந்து, 100 கர்ப்பிணி பெண்களுக்கு மாலை அணிவித்து சீர்வரிசை பொருள்களுடன், ஐந்து வகை உணவுகள், இனிப்பு மற்றும் பழங்களும் வழங்கப்பட்டன.
விழாவில், கூடுதல் ஆட்சியர் கவுசிக், நகராட்சி தலைவர் பரிமளா, முன்னாள் எம்.எல்.ஏ., திராவிட மணி, மாவட்ட தி.மு.க., செயலாளர் ராஜூ உள்ளிட்ட பங்கேற்றனர்.
முன்னதாக, நீலகிரி எம்.பி., ராஜா முதுமலை கார்குடி தெப்பக்காடு பகுதியில், நடமாடும் ரேஷன் கடை, போஸ்காரா - முதுகுழி, போஸ்காரா - செம்பக்கொல்லி இடையிடையே அமைக்கப்பட்ட புதிய சாலைகள், பாடந்துறை பகுதியில் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார்.