/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கஞ்சா வழக்கில் மேலும் ஒருவர் கைது
/
கஞ்சா வழக்கில் மேலும் ஒருவர் கைது
ADDED : ஜூன் 25, 2024 11:14 PM
ஊட்டி:ஊட்டியில் போலீஸ்காரர் கஞ்சா விற்ற வழக்கு தொடர்பாக, மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வெல்வார்பேட்டை முத்தன்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன்,29. இவர் கடந்த, 2020-ம் ஆண்டு போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார். 14-வது பழனி பட்டாலியன் பிரிவில் உள்ள இவர், கோவை மாவட்டம் பில்லுார் அணை பாதுகாப்பு பணியில் இருந்த சமயங்களில் போலீஸ் சீருடையில் இருந்து கொண்டே கஞ்சா விற்பனை செய்துள்ளார்.
கடந்த, 24ம் தேதி ஊட்டி பஸ் ஸ்டாண்டில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வந்த போது சிக்கி கைது செய்யப்பட்டார். போலீஸ்காரர் கஞ்சா விற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில், இவர் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதற்கிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஊட்டியை சேர்ந்த ஜெகதீஸ்வரன்,34, என்பவரும் கைது செய்யப்பட்டு உள்ளார்.