/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காலை சிற்றுண்டி தொடங்கி ஓராண்டு; இனிப்பு வழங்கி மகிழ்ந்த பணியாளர்கள்

ADDED : செப் 11, 2024 10:11 PM

பந்தலுார் : மாநில அரசு திட்டத்தின் கீழ், அரசு ஆரம்ப பள்ளிகளில், சிறு வயது மாணவர்கள் பயன்பெறும் வகையில், காலை சிற்றுண்டி திட்டம் துவங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, காலையில் மாணவர்கள் பள்ளிக்கு வரும் முன்பாக சிற்றுண்டி சமையல் செய்து, வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால், பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் பழங்குடியின மாணவர்கள் அதிக அளவில் பயன் பெற்று வருகின்றனர்.
திட்டம் துவங்கி ஓராண்டு நிறைவடையும் நிலையில், பந்தலுார் அருகே, தமிழக எல்லையில் உள்ள, மராடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் அஷ்ரப் தலைமையில், காலை சிற்றுண்டி பணியாளர்கள், மும்தாஜ், செமிரா, சைனபா ஆகியோர், தங்கள் சொந்த செலவில் இனிப்புதயாரித்து மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் விஜயலட்சுமி, உறுப்பினர் ஜோலி மற்றும் பெற்றோர் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.