/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி பூமாலை வணிக வளாகம் தண்ணீர் தட்டுப்பாடு: கடைகள் காலி
/
ஊட்டி பூமாலை வணிக வளாகம் தண்ணீர் தட்டுப்பாடு: கடைகள் காலி
ஊட்டி பூமாலை வணிக வளாகம் தண்ணீர் தட்டுப்பாடு: கடைகள் காலி
ஊட்டி பூமாலை வணிக வளாகம் தண்ணீர் தட்டுப்பாடு: கடைகள் காலி
ADDED : மே 17, 2024 11:49 PM

ஊட்டி:ஊட்டி பூ மாலை வணிக வளாகத்தில் தண்ணீர் வசதி இல்லாததால் பல கடைகள் காலி செய்யப் பட்டுள்ளன.
ஊட்டி சேரிங்கிராஸ் பஸ் ஸ்டாப்பை ஒட்டி நகராட்சி சொந்தமான பூ மாலை வணிக வளாக கட்டடம் செயல்பட்டு வருகிறது. இங்கு, மகளிர் குழு உட்பட பலர் கடை வைத்து வியாபாரம் செய்தனர். இதன் மூலம் நகராட்சிக்கு மாதந்தோறும் வாடகை வருமானம் கிடைக்கிறது. கடந்த சில மாதங்களாக கடும் வறட்சியால் ஊட்டியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
அந்த வணிக வளாகத்தில் இருந்த தேனீர் கடைகள், உணவு விடுதிகள், தண்ணீர் வசதி இல்லாததால் வியாபாரத்தில் தொய்வு ஏற்பட்டது.
தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர கோரி வியாபாரிகள் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் பயனில்லை.
இதனால், அதிருப்தி அடைந்த வியாபாரிகள் தண்ணீர் தட்டுப்பாட்டால் அந்த வணிக வளாகத்திலிருந்த எட்டு கடைகள் காலி செய்யப்பட்டது.