/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி பழைய அக்ரஹாரம் பகுதியில் குப்பை குவியலால் துர்நாற்றம்
/
ஊட்டி பழைய அக்ரஹாரம் பகுதியில் குப்பை குவியலால் துர்நாற்றம்
ஊட்டி பழைய அக்ரஹாரம் பகுதியில் குப்பை குவியலால் துர்நாற்றம்
ஊட்டி பழைய அக்ரஹாரம் பகுதியில் குப்பை குவியலால் துர்நாற்றம்
ADDED : மே 29, 2024 12:04 AM

ஊட்டி;ஊட்டி பழைய அக்ரஹாரம் பகுதியில் குப்பைகள் குவியலால் துர்நாற்றம் வீசி சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி நகராட்சி மார்க்கெட் அருகே மணிக்கூண்டு எதிபுறத்தில் பழைய அக்ரஹாரம் அமைந்துள்ளது. அதில், ஒரு குறிப்பிட்ட பகுதி நகராட்சிக்கு சொந்தமானது. இங்கு, நகராட்சி துாய்மை பணியாளர்கள் மற்றும் 'பம்ப் ஆப்ரேட்டர்கள்' உள்ளிட்ட, பணியாளர்களின் தேவைகளுக்காக கடந்த காலத்தில் சிறிய அலுவலகம் செயல்பட்டு வந்தது. நாளடைவில், இந்த அலுவலகம் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. இதனால், குறிப்பிட்ட பழைய கட்டடம் சிதிலமடைந்து பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், அப்பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளன. இதனால், துர்நாற்றத்துடன், கொசு தொல்லை அதிகரித்து, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் தேங்கியுள்ள குப்பைகளை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுப்பது அவசியம்.