/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
டால்பின் நோஸ் சுற்றுலா மையத்தில் மீண்டும் 'பார்க்கிங்' கட்டண கொள்ளை 'காற்றில்' பறந்த கலெக்டர் உத்தரவு

ADDED : மே 12, 2024 11:43 PM
குன்னுார்:குன்னுார், டால்பின்நோஸ் காட்சிமுனையில் மீண்டும் வாகன 'பார்க்கிங்' கட்டண கொள்ளை நடப்பதால், சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்
நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் களைகட்டி உள்ள நிலையில், குன்னுார் லேம்ஸ்ராக் காட்சிமுனைக்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இங்கு, செல்லும் வாகனங்களுக்கு பர்லியார் ஊராட்சி சார்பில், டெண்டர் விடப்பட்டு பார்க்கிங் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது, பர்லியார் ஊராட்சி சார்பில் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு இருசக்கர வாகனங்களுக்கு, 20 ரூபாய் நான்கு சக்கர வாகனங்களுக்கு, 30 ரூபாய் வேன் மற்றும் மேக்சி கேப்களுக்கு, 50 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
எனினும் கட்டண கொள்ளையில் ஈடுபட்டதால், கடந்த மாதம் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், பர்லியார் பஞ்சாயத்து சார்பில் கட்டண விபர அறிவிப்பு போர்டு வைக்கப்பட்டு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், தற்போது இந்த அறிவிப்பு போர்டு அகற்றப்பட்டு மீண்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதில், நான்கு சக்கர வாகனங்களுக்கு,100 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
சுற்றுலா வாகன டிரைவர்கள் கூறுகையில், ''கர்நாடகா மற்றும் கேரள வாகனங்களுக்கு இங்கு கூடுதல் 'பார்க்கிங்' கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே நேரத்தில், - சில தெரிந்த வாகனங்களுக்கு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கின்றனர்.
இதனால் சுற்றுலா மையங்களுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து வருவதை தவிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, புகார் தெரிவிக்க இ--பாஸ் முறை போன்று, ' ஆன்லைனில்' புகார்கள் பதிவு செய்து, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.