/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வேண்டும்
/
தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வேண்டும்
தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வேண்டும்
தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வேண்டும்
ADDED : மே 01, 2024 10:50 PM

ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே, பழங்குடியினர் பண்பாட்டு மையம் முன்புற சாலையில், 'பார்க்கிங்' செய்வதால், சுற்று பஸ்கள் திருப்ப முடியாமல் கடும் வாகன நெரிசல் ஏற்படுவது தொடர்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கி வரும், 10ம் தேதி முதல், 20ம் தேதி வரை மலர் கண்காட்சி நடக்கிறது. வார இறுதி நாட்களில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு வருகை தருகின்றனர்.
இந்நிலையில், நெரிசலை கட்டுப்படுத்த போலீசார், போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளனர். கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், 'கால்ப்' கிளப் சாலையில் வாகனங்களை நிறுத்தி, சுற்று பஸ்களில் சுற்றுலா மையங்களுக்கு சென்று வருகின்றனர்.
பயணிகள் நலன் கருதியும் நெரிசலை தவிர்க்கும் பொருட்டும். அதற்காக, 12 சுற்று பஸ்கள் கடந்த சில நாட்களாக, இயக்கப்பட்டு வருகிறது. தாவரவியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பூங்காவின் அழகை கண்டு ரசித்த பின்பு பிற மையங்களுக்கு செல்ல சுற்று பஸ்களுக்காக காத்திருக்கின்றனர்.
குறிப்பிட்ட நேரங்களில் தாவரவியல் பூங்கா அருகே, அமைந்துள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தின் முன்புறம் பல வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுகின்றன.
இதனால், சுற்று பஸ்கள் திரும்ப முடியாமல், நெரிசலில் சிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், சுற்றுலா வரும் பயணிகளுக்கு காலதாமதம் ஏற்படுவதால், இதர மையங்களை காண முடியாத நிலையில் ஏமாற்றம் அடைவது தொடர்கிறது.
சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'இந்த பகுதியில் போலீசாரின் 'ஹெல்ப் டெஸ்க்' இருந்தும் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுவது தொடர்கிறது. எனவே, கோடை சீசன் முடியும் வரையில், குறிப்பிட்ட சாலையோரம் 'பார்க்கிங்' செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்,' என்றனர்.

