/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை பாதையில் பழுதாகி நின்ற பஸ் கோடை வெயிலில் பயணிகள் அவதி
/
மலை பாதையில் பழுதாகி நின்ற பஸ் கோடை வெயிலில் பயணிகள் அவதி
மலை பாதையில் பழுதாகி நின்ற பஸ் கோடை வெயிலில் பயணிகள் அவதி
மலை பாதையில் பழுதாகி நின்ற பஸ் கோடை வெயிலில் பயணிகள் அவதி
ADDED : மார் 22, 2024 09:00 PM

குன்னுார்;கோவையில் இருந்து, ஊட்டிக்கு வந்த அரசு பஸ் பழுதடைந்து மலைபாதையில் நின்றதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
நீலகிரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் பெரும்பாலான பஸ்கள் பழைய பஸ்களாக உள்ளது. அதில்,அவ்வப்போது பஸ்கள் பழுதடைந்து ஆங்காங்கே நிற்பதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று கோவையில் இருந்து ஊட்டிக்கு வந்த அரசு பஸ் பழுதடைந்து குன்னுார் மலை பாதையில் மரப்பாலம் அருகே நின்றது.
பஸ்சில் இருந்த, 50க்கும் மேற்பட்ட பயணிகள் இறக்கி விடப்பட்டு, மாற்று பஸ்கள் வரும் வரை, கோடை வெயிலில் காத்திருந்து அனுப்பி வைத்தனர்.
சில பயணிகள் அவ்வழியாக வந்த கார்களில் 'லிப்ட்' கேட்டும், கூடுதல் தொகை கொடுத்தும் சென்றனர்.
பயணிகள் கூறுகையில்,' மலை பகுதிக்கு சில புதிய பஸ்களை இயக்கி விட்டு, சமவெளியில் ஓடி தேய்ந்த பழைய பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றனர். இதனால், கோடை வெயிலில் பயணிகள் அவதிப்பட வேண்டி உள்ளது.
இதனை ஆய்வு செய்து, புதிய பஸ்களை அதிகளவில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

