/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழுதடைந்து பாதி வழியில் நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அதிருப்தி
/
பழுதடைந்து பாதி வழியில் நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அதிருப்தி
பழுதடைந்து பாதி வழியில் நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அதிருப்தி
பழுதடைந்து பாதி வழியில் நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அதிருப்தி
ADDED : மார் 06, 2025 09:37 PM

குன்னுார்; பழனியில் இருந்து ஊட்டிக்கு வந்த அரசு பஸ், குன்னுாரில் பழுதடைந்து நின்றதால், பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு பஸ்கள் அடிக்கடி பழுதடைந்து நிற்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
'பீக் ஹவர்ஸ்' நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளதால், மாவட்டத்தில் பயணிகள் கூட்ட நெரிசலில் பயணம் செய்கின்றனர். நெரிசலில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்கும் அவலம் தொடர்கிறது.
'புதிய பஸ்கள் இயக்க வேண்டும்,' என, தொடர்ந்து வலியுறுத்திய போதும், பழைய பஸ்களை புதுப்பித்து மஞ்சள் நிற பெயின்ட் அடித்து மாற்றப்பட்டு இயக்கப்படுகிறது.
மேலும், பஸ்கள் உரிய முறையில் பராமரிக்காமல் இயக்குவதால் அடிக்கடி ஆங்காங்கே பழுதடைந்து நிற்பது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று பழனியில் இருந்து, ஊட்டி நோக்கி வந்த அரசு பஸ், குன்னுாரில் பழுதடைந்து நின்றது. பயணிகள் குன்னுாரில் இருந்து, அவ்வழியாக வந்த மற்ற பஸ்களில், அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
எனவே, மலை பாதைகளில் புதிய பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.