/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'மாதந்தோறும் குறிப்பிட்ட நாளில் சம்பளம் தாருங்கள்': தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
'மாதந்தோறும் குறிப்பிட்ட நாளில் சம்பளம் தாருங்கள்': தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
'மாதந்தோறும் குறிப்பிட்ட நாளில் சம்பளம் தாருங்கள்': தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
'மாதந்தோறும் குறிப்பிட்ட நாளில் சம்பளம் தாருங்கள்': தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 24, 2024 09:50 PM

ஊட்டி : 'மாதந்தோறும் குறிப்பிட்ட நாளில் சம்பளம் தாருங்கள்,' என, வலியுறுத்தி துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. வார்டுகளில் சேகரமாகும் மட்கும் குப்பை, மட்காத குப்பைகளை தரம் பிரித்து வாங்க நிரந்தரம் மற்றும் தற்காலிக துாய்மை பணியாளர்கள் என, 300 க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், 180 தற்காலிக துாய்மை பணியாளர்களுக்கு தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், ஊட்டியில் நகராட்சி அலுவலக நுழைவு வாயில் பகுதியில் நேற்று, துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சி.ஐ.டி.யு., மாவட்டதலைவர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார்.
அதில், 'நிரந்தர துாய்மை பணியாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தினை மாதம் தோறும், 5ம் தேதிக்குள் வழங்க வேண்டும், ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு, மாதந்தோறும், 7ம் தேதிக்குள் வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு சீருடை வழங்க வேண்டும். நிரந்தர துாய்மை பணியாளர்களுக்கு ஓய்வுகால பண பலன்களை உரிய காலத்தில் வழங்க வேண்டும்.
திடக்கழிவு மேலாண்மை பணிக்கு பயன்படுத்தப்படும் பழுதடைந்த வாகனங்களை உரிய காலத்தில் பழுது நீக்கி பயன்பாட்டுக்கு தர வேண்டும். ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு செலுத்த வேண்டிய பி.எப்., தொகையினை முறையாக செலுத்த வேண்டும்,' உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வினோத், மாவட்ட பொருளாளர் நவீன் சந்திரன் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஊழியர் சங்க செயலாளர் சேகர், சங்க பொருளாளர் ரவிக்குமார் உட்பட திரளான துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.

