/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பார்த்தீனியம் செடிகளால் பாதிப்பு மக்களுக்கு இல்லை பாதுகாப்பு
/
பார்த்தீனியம் செடிகளால் பாதிப்பு மக்களுக்கு இல்லை பாதுகாப்பு
பார்த்தீனியம் செடிகளால் பாதிப்பு மக்களுக்கு இல்லை பாதுகாப்பு
பார்த்தீனியம் செடிகளால் பாதிப்பு மக்களுக்கு இல்லை பாதுகாப்பு
ADDED : ஜூலை 13, 2024 08:37 AM

கோத்தகிரி கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், பார்த்தீனியம் செடிகள் ஆக்கிரமித்துள்ளதால், மக்களுக்கு சுவாசம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், சமீப காலமாக பார்த்தீனியம் செடிகள் ஆக்கிரமித்துள்ளன. சாலை ஓரங்கள் பொது இடங்கள் மற்றும் விவசாய நிலங்கள் என, அனைத்து பகுதிகளிலும், இச்செடிகள் புதர் போன்று காட்சியளிக்கின்றன. செடிகளில் பூத்துள்ள பூக்களின் மகரந்தம் காற்று வீசும் திசையில் நிலத்தில் முளைப்பதால், இச்செடிகள் இல்லாத இடமே என்ற நிலை உள்ளது. விஷத்தன்மை கொண்ட இச்செடிகளால், வன உரியினங்கள்; மக்களுக்கு ஆஸ்துமா உட்பட சுவாச சம்மந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கோத்தகிரி வட்டாரத்தில், பில்லிக்கம்பை, கட்டபெட்டு, கக்குச்சி,ஒன்றதலை சாலை முழுவதிலும் செடிகள் காணப்படுகிறது. எனவே, சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், செடிகளை வேரோடு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.