/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறுத்தைகள் சண்டை அச்சத்தில் மக்கள்
/
சிறுத்தைகள் சண்டை அச்சத்தில் மக்கள்
ADDED : மார் 22, 2024 10:03 PM
பந்தலுார்;பந்தலுார் பஜாரை ஒட்டி அமைந்துள்ளது இந்திரா நகர் கிராமம். இங்கு, 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர்.
அதில், தேயிலை தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு இரண்டு சிறுத்தைகள் சண்டையிட்டு உள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
சிறுத்தைகள் சண்டையிட்டு கொண்டதால், மக்கள் அதனருகே சென்று துரத்த முடியாத நிலையில், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் வனக்குழுவினர் யானைகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த நிலையில், அப்பகுதிக்கு செல்லவில்லை.
தொடர்ந்து, ஒரு வழியாக நள்ளிரவில் சிறுத்தைகள் அங்கிருந்து சென்றது. அதனை தொடர்ந்து மக்கள் நிம்மதி அடைந்தனர்.
ஏற்கனவே இப்பகுதியில் சிறுத்தை மனிதர்களை தாக்கி வந்த நிலையில், மீண்டும் சிறுத்தைகள் குடியிருப்புகளை ஒட்டி முகாமிட்டு உள்ளது மக்களை அச்சமடைய செய்துள்ளது.

