ADDED : மே 09, 2024 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார், : நீலகிரி மாவட்ட பா.ஜ., பொது செயலாளர் நளினி சந்திரசேகர் உட்பட நிர்வாகிகள், --கூடலுார் ஆர்.டி.ஓ.,விடம் அளித்த மனு:
கடந்த மாதம், 29ம் தேதி மாநில வனத்துறை யானைகள் வழித்தட வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கூடலுார் பகுதியில், 3 வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பொதுமக்களிடம் கருத்து கேட்க போதிய அவகாசம் வழங்கவில்லை. வரைவு திட்ட அறிக்கை ஆங்கிலத்தில் உள்ளது.
திட்டத்தை கூடலுார் பகுதியில் நடைமுறைப்படுத்தினால் மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும்.
எனவே, வனத்துறை வெளியிட்டுள்ள யானைகள் வழித்தடம் வரைவு வரைவு அறிக்கையை அரசு ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.