/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீட்டு மனை பட்டா கோரி கொடமரம் மக்கள் மனு
/
வீட்டு மனை பட்டா கோரி கொடமரம் மக்கள் மனு
ADDED : ஆக 20, 2024 10:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி : வீட்டு மனை பட்டா கோரி கொடமரம் மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
முள்ளிகூர் ஊராட்சி கொடமரம் கிராம மக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனு: குந்தா தாலுகா முள்ளிகூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொடமரம் பகுதியில், 80 வீடுகள் உள்ளன. அதில், 20 குடும்பங்கள் குடிசை வீடுகளில் வாழ்ந்து வருகிறோம். குடிசை வீடுகளை ஒட்டி ஓடைகள், ஊற்றுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் நிலச்சரிவு அபாயம் உள்ளது. சமீபத்தில் பெய்த கன மழைக்கு, 3 குடிசை வீடுகள் இடிந்து விட்டது. எங்களுக்கு ஒரே இடத்தில் வீட்டு மனை பட்டா தந்து உதவுவதுடன், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

