ADDED : ஜூலை 15, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
பந்தலுார்: மகாத்மா காந்தி பொது சேவா மையம் நிர்வாகி நவ்ஷாத் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ள மனு:
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர், பந்தலுாரில் நடந்த ஜமாபந்தியில், 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்ட நிலையில், பெரும்பாலான மனுக்கள் நிலுவையில் வைக்கப்பட்டு உள்ளது. மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருந்தால், சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். அல்லது தீர்வு காண வேண்டும். எனவே, பெயரளவுக்கு முகாம்களை நடத்தி, மக்களின் நேரம் மற்றும் பண இழப்பை ஏற்படுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
