/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'பிளாஸ்டிக்' ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி; தேர்தலில் ஓட்டளிக்க இளைஞருக்கு அறிவுரை

ADDED : ஏப் 02, 2024 10:59 PM

ஊட்டி;ஊட்டியில் 'பிளாஸ்டிக்' ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்ட இளைஞருக்கு பாராட்டு தெரிவித்த தேர்தல் அலுவலர்கள், தேர்தலின் போது ஓட்டளிக்க அறிவுறுத்தினர்.
பந்தலுார் அம்மன் காவு கிராமத்தை சேர்ந்த சிவபிரகாஷ், 24. ஐ.டி.ஐ., படித்த இவர் விவசாயம் செய்கிறார்.
இவர், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு வலியுறுத்தி, பந்தலுார் கொளப்பள்ளி பஜாரில் இருந்து, கன்னியாகுமரி வழியாக, லடாக் வரை சைக்கிள் பயணத்தை துவங்கியுள்ளார். நேற்று முன்தினம் காலை, புறப்பட்ட இவர், 15 ஆயிரம் கி.மீ., பயணம் மேற்கொண்டு, செல்லும் இடங்களில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை சிவப்பிரகாஷ் ஊட்டிக்கு வந்தபோது, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இவருக்கு பாராட்டு தெரிவித்தும், லோக்சபா தேர்தலில் தவறாமல் வாக்களிக்க அறிவுறுத்தினர்.
தேர்தல் விழிப்புணர்வு வில்லையை அவர் வைத்திருந்த பையில் ஒட்டினார்.