/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பிளஸ்--டூ பொது தேர்வு இன்று நிறைவு
/
பிளஸ்--டூ பொது தேர்வு இன்று நிறைவு
ADDED : மார் 21, 2024 10:42 AM
ஊட்டி;நீலகிரியில், பிளஸ்-டூ பொது தேர்வு இன்று நிறைவு பெறுகிறது.
மாநில பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்-டூ மாணவர்களுக்கான பொது தேர்வு இம்மாதம், 1ம் தேதி துவங்கியது. நீலகிரியில், 40 மையங்களில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். முதலில் மொழி பாடங்களுக்கும், பின் முக்கிய பாடங்களுக்கும் தேர்வுகள் நடந்தது.
இந்த ஆண்டு தமிழ், கணிதம் தேர்வு எளிதாகவும், ஆங்கிலம், இயற்பியல் தேர்வுகளின் வினாத்தாள்கள் கடினமாகவும் இருந்தன.
பிளஸ்-டூ மாணவர்களுக்கான இறுதி தேர்வு இன்று (22ம் தேதி) நடக்கிறது. இதில், உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், தொழிற்கல்வி இன்ஜினியரிங் பாடங்கள், அலுவலக மேலாண்மை உள்ளிட்ட பாடங்களுக்கு இன்று தேர்வு நடக்கிறது.
இத்துடன் பிளஸ்-டூ பொது தேர்வு நிறைவு பெறுகிறது. பிளஸ்-டூ விடைத்தாள் மதிப்பீட்டு பணி ஏப்., 1ம் தேதி துவங்க உள்ளது. மே 6ம் தேதி தேர்வு முடிவு வெளியாகிறது. நிறைவு பெறுகிறது.

