/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மர கடத்தல் லாரியை பிடித்த போலீசார்
/
மர கடத்தல் லாரியை பிடித்த போலீசார்
ADDED : செப் 17, 2024 09:59 PM
பந்தலுார் : பந்தலுார் அருகே, பூலக்குன்னு சோதனை சாவடி வழியாக, கேரளாவிற்கு மரங்கள் கடத்தி சென்ற லாரியை பிடித்த போலீசார் வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட, குந்தலாடி அருகே கடலக்கொல்லி சுற்றுவட்டார பகுதிகளில், அனுமதி இன்றி மரங்கள் வெட்டி கேரளாவிற்கு கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனால், குந்தலாடியிலிருந்து கேரளா மாநிலம் செல்லும் சாலையில் உள்ள பாட்டவயல், மதுவந்தால், நம்பியார்குன்னு சோதனை சாவடிகளில் போலீசார் மற்றும் வனத்துறையினர் வாகனங்களை ஆய்வு செய்தனர். இந்நிலையில், மரக்கடத்தல் கும்பல், அய்யன் கொல்லியிலிருந்து, கேரளா மாநிலம் செல்லும் பூலக்குன்னு சோதனை சாவடி வழியாக லாரியில் மரங்களை கடத்தி சென்றுள்ளனர். அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் ராமு, லாரியை கைகாட்டி நிறுத்திய போது, லாரி நிற்காமல் சென்றுள்ளது. பைக்கில் விரட்டி சென்று லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்ததில், அனுமதி இன்றி வெட்டப்பட்ட மரங்கள் கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.
தொடர்ந்து, லாரியை பறிமுதல் செய்ததுடன், சூசம்பாடியை சேர்ந்த டிரைவர் நாசர் மற்றும் லாரியை, பிதர்காடு வனச்சரகர் ரவியிடம் போலீசார் ஒப்படைத்தனர். விசாரணை நடந்து வருகிறது.