தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ காணாமல் போன மூன்று சிறுவர்கள் நான்கு மணி நேரத்தில் மீட்ட போலீசார்

காணாமல் போன மூன்று சிறுவர்கள் நான்கு மணி நேரத்தில் மீட்ட போலீசார்

காணாமல் போன மூன்று சிறுவர்கள் நான்கு மணி நேரத்தில் மீட்ட போலீசார்


ADDED : ஜூன் 05, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 05:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார்: கூடலுாரில் செயல்பட்டு வரும், தனியார் சிறுவர் காப்பகத்தில், ஆதரவற்ற சிறுவர்கள் வசித்து வருகின்றனர்.

அதில், 13 முதல் 15 வயதுடைய மூன்று சிறுவர்கள் நேற்று காலை காணவில்லை. நிர்வாகத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில், எஸ்.ஜ.,கள் சர்புதீன், கவியரசு மற்றும் போலீசார் இரண்டு குழுக்களாக பிரிந்து, சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மதியம், 2:00 மணிக்கு அனை செத்தசொல்லி பகுதியில், 3 பேரையும் போலீசார் மீட்டனர். விசாரணையில், அங்குள்ள மயான பகுதியில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு திரும்பி வந்ததாக, தெரிவித்தனர். இதனால், அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us