/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காடெெஹத்தை கோவில் கும்பாபிேஷகம் அசம்பாவிதங்களை தடுக்க போலீஸ் பாதுகாப்பு
/
காடெெஹத்தை கோவில் கும்பாபிேஷகம் அசம்பாவிதங்களை தடுக்க போலீஸ் பாதுகாப்பு
காடெெஹத்தை கோவில் கும்பாபிேஷகம் அசம்பாவிதங்களை தடுக்க போலீஸ் பாதுகாப்பு
காடெெஹத்தை கோவில் கும்பாபிேஷகம் அசம்பாவிதங்களை தடுக்க போலீஸ் பாதுகாப்பு
ADDED : ஜூலை 01, 2024 02:11 AM
மஞ்சூர்;'காடெெஹத்தை கோவில் கும்பாபிேஷகம் திட்டமிட்டப்படி நடக்கும்,' என, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரி தெரிவித்தார்.
மஞ்சூர் அருகே, கீழ்குந்தா கிராமத்தில் பிரசித்தி பெற்ற காடெெஹத்தை கோவில் உள்ளது. 14 ஊர் கிராம மக்களுக்கு சொந்தமான இக்கோவிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொலிவுப்படுத்தப்பட்டு கும்பாபிேஷகத்திற்கு தயார்படுத்தப்பட்டது.
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவில் இருப்பதால், இன்று மஹா கும்பாபிேஷகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டது.'தெவ்வப்பா' பண்டிகை நடத்துவது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.
இதற்கிடையே, ஒரு பிரிவினர், 'கோவில் திருப்பணிகள் முழுமை பெறவில்லை, கோவிலுக்கு அறங்காவலர் குழு அமைக்கவில்லை என, கூறி கும்பாபிேஷக தேதியை தள்ளி வைக்க வேண்டும்,' என, வலியுறுத்தியுள்ளனர்.
மற்றொரு தரப்பினர், 'ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவித்த தேதியில் கும்பாபிேஷகம் நடத்த வேண்டும்,' என, கூறியுள்ளனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் கூறுகையில்,''கோவில் கும்பாபிேஷகம் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் நடக்கிறது.
எனினும், இந்த விவகாரத்தில் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு உள்ளது. ஒரு தரப்பினர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக தெரிவித்ததை அடுத்து, போலீசார் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
சுமூக தீர்வு ஏற்பட்டதை அடுத்து, திட்டமிட்டப்படி கும்பாபிேஷகம் நடக்கிறது. அசம்பாவிதங்களை தடுக்க கீழ்குந்தா கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது,'' என்றார்.
ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ஜெகநாதன் கூறுகையில், ''திட்டமிட்டப்படி நாளை (இன்று) போலீஸ் பாதுகாப்புடன் கும்பாபிேஷகம் நடக்கும்.'' என்றார்.