/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
துப்பாக்கியுடன் வந்த போதை நபர் விசாரித்து அனுப்பிய போலீசார் விசாரித்து அனுப்பிய போலீசார்

ADDED : ஜூலை 03, 2024 02:20 AM

குன்னுார்;குன்னுாரில் மது போதையில் இருந்த நபர் துப்பாக்கியால் நாயை சுட முயற்சி செய்தது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தினர்.
குன்னுார் மோர்ஸ் கார்டன் அருகே தனியார் கண் மருத்துவமனை டாக்டரின் வீட்டின் அருகே ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை அழைத்து வந்த நபர், துப்பாக்கியால் வேறு ஒரு நாயை சுட முயற்சித்துள்ளார். அது குறித்த 'சிசிடிவி' வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக, குன்னுார் டவுன் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
போலீசார் கூறுகையில், 'இதே பகுதியை சேர்ந்த ஜேம்ஸ்தாமஸ்,64, என்பவர் தனியாக வசித்து வருகிறார். இவரின் மனைவி மற்றும் மகள் வெளிநாட்டில் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெட்போர்டு பகுதியில் உள்ள ஸ்போர்ட்ஸ் கடையில் ஏர்கன் ஒன்றை வாங்கியுள்ளார்.
மது போதையில் இருந்த அவர், சாலையில் நடந்து சென்ற போது டாக்டரின் வளர்ப்பு நாய் குரைத்ததால் ஏர்கன் மூலம் நாயை சுட முயற்சித்துள்ளார்.
ஏர்கன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,' என்றனர். இவருக்கு 'அட்வைஸ்' மட்டும் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.