/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் வரும் 20ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்
/
ஊட்டியில் வரும் 20ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்
ஊட்டியில் வரும் 20ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்
ஊட்டியில் வரும் 20ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்
ADDED : செப் 13, 2024 10:21 PM
ஊட்டி, : மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வரும், 20ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம், ஊட்டி பிங்கர் போஸ்ட் கூடுதல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடக்கிறது.
முகாமில், பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய, முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
முகாமில், '8ம் வகுப்பு முதல், பிளஸ்-2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ., கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் மற்றும் டிரைவர்கள்,' ஆகிய பணிகளுக்கு நேர்முக தேர்வு நடக்கிறது. தனியார் துறையில் பணிபுரிய ஆர்வம் உள்ள அனைவரும் முகாமில் பங்கேற்று பயனடையலாம்.
இம்முகாமில் தேர்வு செய்யப்பட்டு, தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யப்படுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.
பங்கேற்பவர்கள் tnprivatejobs.tn.gov.in என்று இனிய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும், விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது, 0423-2444004, 7200019666 எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.