/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறந்த பூங்காக்களுக்கு பரிசு தேர்வு குழு ஆய்வு
/
சிறந்த பூங்காக்களுக்கு பரிசு தேர்வு குழு ஆய்வு
ADDED : மே 16, 2024 11:52 PM
ஊட்டி:நீலகிரி மாவட்டம் முழுவதும் சிறந்த பூங்காக்களுக்கு பரிசு வழங்கும்பொருட்டு, தேர்வு குழு நேரில் சென்று ஆய்வு செய்து உள்ளது.
இதன் ஒருபகுதியாக, மலர் கண்காட்சி தொடக்க விழாவில், சிறந்த மலர் அலங்காரம், கொய்மலர், வெப்பமண்டலம், மித வெப்ப மண்டலம், மலை பிரதேச மற்றும் பாரம்பரிய காய்கறிகள், பழங்கள், பழ பொருட்கள் மற்றும் மருத்துவ தாவரங்கள் போன்றவற்றை, 188 பேர் காட்சிப்படுத்தினர்.
அதில், மாவட்டத்துக்கு உரித்தான உருளை கிழங்கு உள்ளிட்ட மலை காய்கறிகளை, 13 விவசாயிகள் காட்சிப்படுத்தினர்.
அவர்களுக்கு, மூன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளது. அவர்கள், 35 வகை காய்கறிகளை காட்சிப்படுத்தி உள்ளனர்.
இதேபோல, வீட்டு தோட்டங்கள், சிறந்த பூங்காக்களும் நிறைவு நாளில் பரிசு வழங்கப்பட உள்ளது.

