/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுச்சூழல் கண்காட்சி சிறந்த படைப்புகளுக்கு பரிசு
/
சுற்றுச்சூழல் கண்காட்சி சிறந்த படைப்புகளுக்கு பரிசு
சுற்றுச்சூழல் கண்காட்சி சிறந்த படைப்புகளுக்கு பரிசு
சுற்றுச்சூழல் கண்காட்சி சிறந்த படைப்புகளுக்கு பரிசு
ADDED : பிப் 27, 2025 10:02 PM
ஊட்டி, ; ஊட்டியில் நடந்த சுற்றுச்சூழல் கண்காட்சியில் மாணவர்களின் சிறந்த படைப்புகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்ட தேசிய பசுமை படை சார்பில் நடந்த கண்காட்சியில், குன்னுார் கல்வி மாவட்ட பள்ளிகளில் இருந்து திரளான மாணவர்கள் பங்கேற்றனர். அதில், 'இயற்கைக்கு பாதிப்பு இல்லாத திட்டங்களை முன்னெடுப்பது; வனவளம், கானுயிர் பாதுகாப்பு; நீர்நிலைகளின் முக்கியத்துவம்; பிளாஸ்டிக் தவிர்ப்பு,' உட்பட, சுற்றுச்சூழல் குறித்த மாணவர்களின் சிறந்த படைப்புகளுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட கல்வித்துறை மற்றும் மாவட்ட பசுமை திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்று, மாணவர்களை ஊக்குவித்து பாராட்டினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, தேசிய பசுமை படை, மாவட்ட ஈகோ கிளப் உட்பட பலர் செய்திருந்தனர்.