/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலை வசதி ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை
/
சாலை வசதி ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை
ADDED : ஏப் 03, 2024 10:22 PM
பந்தலுார் : 'நடுவட்டம் அருகே ஊக்கர் பகுதிக்கு பிரசாரத்துக்கு சென்ற எம்.எல்.ஏ.,விடம் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்,' என, மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
நீலகிரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக, கூடலுார் தொகுதி எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஓட்டு கேட்டு வருகிறார். இந்நிலையில், சாலை வசதி இல்லாத நடுவட்டம் அருகே ஊக்கர் பகுதியில், எம்.எல்.ஏ., ஜெயசீலன் சென்று ஓட்டு கேட்டார். அப்போது, அப்பகுதி மக்கள், 'தங்கள் கிராமத்திற்கு சாலை மற்றும் அரசு பஸ் வசதி ஏற்படுத்தி தரவேண்டும்,' என, வலியுறுத்தினர்.
'உரிய நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும்,' என, எம்.எல்.ஏ., உறுதி அளித்தார். அதனை ஏற்று கொண்ட பொதுமக்கள் ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தனர்.

