/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமடைந்த சாலையில் தேங்கும் மழைநீர்: மக்கள் பாதிப்பு
/
சேதமடைந்த சாலையில் தேங்கும் மழைநீர்: மக்கள் பாதிப்பு
சேதமடைந்த சாலையில் தேங்கும் மழைநீர்: மக்கள் பாதிப்பு
சேதமடைந்த சாலையில் தேங்கும் மழைநீர்: மக்கள் பாதிப்பு
ADDED : ஆக 07, 2024 10:40 PM

கூடலுார் : கூடலுார் தொரப்பள்ளி அருகே, சேதமடைந்துள்ள குணில் -மொளப்பள்ளி சாலையில் தேங்கும் மழை நீரால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
கூடலுார் குணில் கிராமத்துக்கு தொரப்பள்ளி அருகே, மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சாலை பிரிந்து செல்கிறது. தொரப்பள்ளி முதல் குணில் சந்திப்பு வரையிலான தார் சாலை நல்ல நிலையில் உள்ளது. அங்கிருந்து மொளப்பள்ளி பகுதிக்கு, 500 மீட்டர் சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலையில், ஒரு பகுதி இன்டர்லாக் கற்களில் சாலை அமைத்துள்ளனர். சேதமடைந்த, 150 மீட்டர் துாரம் சாலை சீரமைக்க வில்லை. அந்த குழிகளில் மழை நீர் தேங்குவதால், அப்பகுதியை கடந்து செல்ல மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
மக்கள் கூறுகையில், 'சேதமடைந்த சாலையை கடந்து செல்ல சிரமமாக உள்ளது. எனவே, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.