/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரண்டு ஓட்டுச்சாவடிகள் இடம் மாற்றம்
/
இரண்டு ஓட்டுச்சாவடிகள் இடம் மாற்றம்
ADDED : ஏப் 08, 2024 11:36 PM

கூடலுார்;கூடலுார் தேவன் ஊராட்சி பள்ளியில் செயல்பட்டு வந்த இரண்டு ஓட்டு சாவடிகள், வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டன.
கூடலுார் தேவர்சோலை அருகே, தேவன் எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய பள்ளியில், 90, 91 ஆகிய இரண்டு ஓட்டுச் சாவடிகள் செயல்பட்டு வந்தன. இப்பள்ளி, 4 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. கடந்த சட்டசபை தேர்தலில், இம் மையத்தில ஓட்டுப்பதிவு நடந்தது.
இந்நிலையில், மூடப்பட்ட பள்ளி கட்டடங்கள் பராமரிப்பின்றி ஆபத்தான நிலையில் இருப்பதாவும், அங்குள்ள இரண்டு ஓட்டுச் சாவடிகளை, கோட்டமேடு, மேபீல்ட் ஊராட்சி பள்ளிகளுக்கு மாற்ற வருவாய் துறையினர் பரிந்துரை செய்தனர்.
தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் உத்தரவுபடி, 90வது ஓட்டுச் சாவடி கோட்டமேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கும்; 9வது ஓட்டுச்சாவடி மேபீல்ட் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளன. ஓட்டுச்சாவடி மாற்றத்திற்கு ஆட்சேபம் தெரிவித்த மக்கள், மீண்டும் இப்பள்ளியில் ஓட்டு சாவடியை அமைக்க வலியுறுத்தியுள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில்,'மூடப்பட்ட பள்ளி கட்டடங்கள் பராமரிப்பு இன்றி, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால், இங்கு செயல்பட்டு வந்த ஓட்டுச் சாவடிகள், முறையான வழிகாட்டுதலின்படி, அரசியல் கட்சி மற்றும் அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்பட்டு, மாற்றப்பட்டுள்ளது,' என்றனர்.

