தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பெரிய மரங்களால் ஆபத்து அகற்றினால் பாதிப்பில்லை

பெரிய மரங்களால் ஆபத்து அகற்றினால் பாதிப்பில்லை

பெரிய மரங்களால் ஆபத்து அகற்றினால் பாதிப்பில்லை


ADDED : ஆக 14, 2024 12:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2024 12:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோத்தகிரி:கோத்தகிரி பஸ் நிலையத்தில் வானுயர்ந்த மரங்களால் பயணிகளுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

கோத்தகிரி பஸ் நிலையத்தில், உள்ளூர் மற்றும் சமவெளி பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பஸ்சிற்காக பயணிகள், தாங்கள் செல்லும் இடங்களுக்கு செல்ல காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

பஸ் நிலையத்தின் மேல் பகுதியில், அபாயகரமான மரங்கள் நிறைந்துள்ளன.

இந்த மரங்களை அகற்ற வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும், நடவடிக்கை இல்லை. தற்போது, மழைக்காலம் என்பதால், மழையுடன் காற்று வீசினால், ஆபத்தான மரங்கள் விழும் அபாயம் உள்ளது.

கடந்த இரு ஆண்டுக்கு முன்பு, பஸ் நிலையத்தில், 30க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மரம் விழுந்தது. இரவு நேரம் என்பதால், ஆபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும், பஸ் நிலைய மேற்கூரை சேதமடைந்தது.

எனவே, பருவ மழையின் போது அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க, சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து ஆபத்தான மரங்களை மட்டும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us