/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரி 'பார்க்கிங்' தளம் சீரமைப்பு: வாகனங்கள் நிறுத்த தடையால் பாதிப்பு
/
கோத்தகிரி 'பார்க்கிங்' தளம் சீரமைப்பு: வாகனங்கள் நிறுத்த தடையால் பாதிப்பு
கோத்தகிரி 'பார்க்கிங்' தளம் சீரமைப்பு: வாகனங்கள் நிறுத்த தடையால் பாதிப்பு
கோத்தகிரி 'பார்க்கிங்' தளம் சீரமைப்பு: வாகனங்கள் நிறுத்த தடையால் பாதிப்பு
ADDED : மே 02, 2024 11:47 PM

கோத்தகிரி:கோத்தகிரி பஸ் நிலையத்தில் 'பார்க்கிங்' தளம் குழி மூடப்பட்டிருந்தும், வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், நெரிசல் அதிகரித்துள்ளது.
கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில், ஊட்டி, கக்குச்சி மற்றும் திருச்சிக்கடி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் நிறுத்தம் ஒட்டி, தனியார் வாகன 'பார்க்கிங்' தளம் அமைந்துள்ளது. இங்கு, கடந்த நான்கு மாதங்கள் முன்பு ஒரு பகுதியில் குழி ஏற்பட்டது.
இதனால் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட இடத்தில் போலீசார் 'பேரிகார்டு' அமைத்து தனியார் வாகனங்கள் நிறுத்துவதை தடுத்ததால், வாகனங்கள் சாலையை ஒட்டி நிறுத்தப்பட்ட இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு, குழியை மண் நிரப்பி, காங்ரீட் போட்டு மூடியது. இருப்பினும், குறிப்பிட்ட இடத்தில் வாகனங்கள் நிறுத்த போலீசார் தடை விதித்துள்ளனர்.
இதனால், தனியார் வாகனங்கள் நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் கூறுகையில், 'கோடை விழா துவங்கி, ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ள கோத்தகிரி பஸ் நிலையத்தை கடந்து, நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.
எனவே, போலீசார் பேரிகார்டை அகற்றி, வாகனங்கள் நிறுத்த வழிவகை ஏற்படுத்தும் பட்சத்தில், 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தலாம். நெரிசலும் தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது,'என்றனர்.