/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி பூங்கா பெரணி இல்லத்தில் சீரமைப்பு பணி
/
ஊட்டி பூங்கா பெரணி இல்லத்தில் சீரமைப்பு பணி
ADDED : பிப் 27, 2025 10:04 PM

ஊட்டி, ; ஊட்டி தாவரவியல் பூங்கா பெரணி இல்ல சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பெரணி இல்லம் அமைக்கப்பட்டது. பழமையான பெரணி இல்லத்தின் கண்ணாடி மாளிகையின் மேற்கூரை வலுவிழந்து அடிக்கடி கண்ணாடி விழுவதால் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டது.
சுற்றுலா பயணிகளின் நலன் கருதி பெரணி இல்லம் மூடப்பட்டது. பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணியர் பெரணி இல்லத்தை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்நிலையில், நடப்பாண்டின் கோடை விழா நிகழ்ச்சி ஏப்., மே மாதங்களில் தாவரவியல் பூங்காவில் நடக்கிறது. ஏராளமான சுற்றுலா பயணியர் வர உள்ளதால், பூங்கா நிர்வாகம் பெரணி இல்லத்தை சீரமைக்க நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி, மேற்கூரையில் உள்ள கண்ணாடி, பக்கவாட்டு கண்ணாடிகள் முழுவதும் அகற்றப்பட்டு சீரமைப்பு பணி நடந்து வருகிறது.