/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வனப்பகுதியில் ஓய்வு குடில் விலங்குகளால் ஆபத்து
/
வனப்பகுதியில் ஓய்வு குடில் விலங்குகளால் ஆபத்து
ADDED : மே 12, 2024 11:49 PM

பந்தலுார்:பந்தலுார் அருகே வனப்பகுதி அமைந்துள்ள இடத்தில் சிறு குடில் அமைத்து, மாலை மற்றும் இரவு நேரங்களில் சிலர் ஓய்வெடுத்து வருவதால் பாதிப்பு ஏற்படுகிறது.
பந்தலுார் அருகே, சேரம்பாடி சுங்கம் பகுதியில் வனத்துறை சோதனை சாவடி அமைந்துள்ளது.
அதற்கு எதிரே தனியார் தோட்டத்திற்கு சொந்தமான வனப்பகுதியும், அதனை ஒட்டி பி.எஸ்.என்.எல். அலுவலகம், போலீசார் குடியிருப்புகள் ஆகியவை அமைந்துள்ளன. இங்குள்ள மைதானத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் விளையாட்டு பயிற்சியில் பலரும் ஈடுபடுகின்றனர்.
இப்பகுதி பகல் மற்றும் இரவு நேரங்களில் யானைகள் மற்றும் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வந்து செல்லும் வழித்தடம் ஆகவும் உள்ளது. இந்த பகுதியில் சிலர் சிறு குடில் அமைத்து அதில் மாலை மற்றும் இரவு நேரங்களில் அமர்ந்து ஓய்வெடுக்கின்றனர்.
இது போன்ற நேரங்களில் வனவிலங்குகள் இந்த வழியாக வந்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும்.
மக்கள் கூறுகையில், வனத்துறையினர் ஆய்வு செய்து வனப்பகுதியில் அமைத்துள்ள இதுபோன்ற குடில்களை அகற்ற வேண்டும்,' என்றனர்.