/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
163 மகளிர் குழுக்களுக்கு ரூ.19 கோடி கடனுதவி; அரசு தலைமை கொறடா வழங்கினார்
/
163 மகளிர் குழுக்களுக்கு ரூ.19 கோடி கடனுதவி; அரசு தலைமை கொறடா வழங்கினார்
163 மகளிர் குழுக்களுக்கு ரூ.19 கோடி கடனுதவி; அரசு தலைமை கொறடா வழங்கினார்
163 மகளிர் குழுக்களுக்கு ரூ.19 கோடி கடனுதவி; அரசு தலைமை கொறடா வழங்கினார்
ADDED : மார் 09, 2025 10:48 PM
ஊட்டி; ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில், 163 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, 19 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான மாபெரும் வங்கி கடன் வழங்கும் விழா, ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்தது.
அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:நம் மாநிலத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் முன்னேற்றம் அடைய பல கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு வருகிறது. பெண்களுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நீலகிரியில் துவக்கத்தில் இரண்டு பஸ்களில் மட்டுமே விடியல் பயணம் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது, 90 வழித்தடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
தற்போது,'85 மகளிர் சுய உதவி குழுக்கள்; நகர்புற பகுதிகளில், 47 மகளிர் சுய உதவி குழுக்கள்; பேரூராட்சி பகுதிகளில், 31 மகளிர் சுய உதவி குழுக்கள்,' என, 163 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, 19 கோடி ரூபாய் கடன் உதவிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கி கிளைகளில் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். ஊட்டி எம்.எல்.ஏ., கணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.