/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிலம்பம் பயிற்சியில் அசத்தும் கிராமப்புற மாணவர்கள்
/
சிலம்பம் பயிற்சியில் அசத்தும் கிராமப்புற மாணவர்கள்
சிலம்பம் பயிற்சியில் அசத்தும் கிராமப்புற மாணவர்கள்
சிலம்பம் பயிற்சியில் அசத்தும் கிராமப்புற மாணவர்கள்
ADDED : ஆக 13, 2024 01:56 AM

பந்தலுார்;பந்தலுாரில் சிலம்பம் பயிற்சியில் அசத்தும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பந்தலுாரில் ஆர்.கே., சிலம்பம் அகாடமி சார்பில் கிராமப்புற மாணவ, மாணவியருக்கு சிலம்பம் சிறப்பு பயிற்சி தனியார் மண்டபத்தில் நடந்தது.
தேசிய நடுவரும், முதன்மை பயிற்சியாளருமான ரகுராம் தலைமை வகித்து பேசுகையில், ''சிலம்பம் மற்றும் தற்காப்பு கலைகள் சமவெளி பகுதிகளில் மட்டுமே, கடந்த காலங்களில் கற்று தரப்பட்டு வந்தது. தற்போது, அந்த நிலை மாறி கிராமப்புற தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் பழங்குடியின மாணவர்கள், இது போன்ற தற்காப்பு பயிற்சிகளை பெற்று சாதித்து வருவது வரவேற்க கூடியதாக உள்ளது.
எனவே, பெற்றோர் தங்கள் குழந்தைகளை, கல்வி கூடங்களுக்கு அனுப்புவதுடன், இதுபோன்ற பயிற்சிகளுக்கு அனுப்பினால், தீய பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்தாமல், உடல் திறனை மேம்படுத்தி, கல்வியில் மேம்பட்டு நல்ல மனிதர்களாக உருவாக இயலும்,'' என்றார்.
தொடர்ந்து, பயிற்சி பெற்ற அனைவருக்கும் அகாடமி சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சென்னையை சேர்ந்த முதன்மை பயிற்சியாளர்கள் குமார், கமலேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.---

