/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை
/
சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை
ADDED : ஜூலை 03, 2024 09:59 PM
அன்னுார் : 'சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது,' என அன்னுார் பேரூராட்சியில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் அப்துல் கரீம், அன்னுார் பேரூராட்சி அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :
அன்னுார் பேரூராட்சியில், பல வீதிகளில் ஆட்டு இறைச்சி கடை மற்றும் கோழி இறைச்சி கடைகள் அதிக அளவில் உள்ளன. இந்த கடைகள் எந்த மறைப்பும் இல்லாமல், சாலையோர புழுதி இறைச்சி மீது விழும்படி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் இறைச்சி கழிவுகள் கடைகளை ஒட்டியுள்ள சாக்கடை கால்வாய்களில் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. எனவே பேரூராட்சி அதிகாரிகள் இறைச்சி கடைகளுக்கு சென்று, ஆய்வு செய்து, சுகாதாரமான முறையில் இறைச்சியை வைத்து, பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அறிவுறுத்த வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவைப் பெற்ற பேரூராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.