/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தோட்டக்கலை பண்ணையில் தேயிலை, காபி நாற்று விற்பனை
/
தோட்டக்கலை பண்ணையில் தேயிலை, காபி நாற்று விற்பனை
ADDED : ஆக 31, 2024 02:22 AM

கூடலுார்;கூடலுார் தோட்டக்கலை துறை பண்ணையில் தேயிலை; காபி நாற்று விற்பனை நடந்து வருகிறது.
கூடலுார், பொன்னுார் தோட்டக்கலை துறை பண்ணை, உதவி இயக்குனர் (சிறப்பு பணி) வெளியிட்டுள்ள அறிக்கை: கூடலுார், பொன்னுார் தோட்டக்கலை துறை பண்ணையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேயிலை, காபி உள்ளிட்ட நாற்றுகள் உற்பத்தி செய்து விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.
அதன்படி, 'பாக்கு நாற்று, 25 ரூபாய்; குறுமிளகு நாற்று, 15 ரூபாய்; காபி நாற்று, 10 ரூபாய்; தேயிலை நாற்று, 4 ரூபாய்; சர்வசுகந்தி நாற்று, 20 ரூபாய்; கிராம்பு நாற்று, 15 ரூபாய்; பேஷன்புரூட் நாற்று, 15 ரூபாய்,' என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தேவையுள்ள விவசாயிகள் பொன்னுார் தோட்டக்கலை பண்ணையில் நாற்றுகளை பெற்று பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.