/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுலா பயணிகளுக்கு உப்பு, சர்க்கரை கரைசல் நீர்
/
சுற்றுலா பயணிகளுக்கு உப்பு, சர்க்கரை கரைசல் நீர்
ADDED : மே 07, 2024 11:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி:ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு உப்பு, சர்க்கரை கரைசல் நீர் வழங்கப்பட்டது.
கோடை வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், வெயிலின் தாக்கத்தின் எதிர் விளைவை தடுக்க உப்பு கரைசல் நீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா வரும் சுற்றுலா பயணிகளுக்கு, ஊட்டி நகராட்சி சார்பில் உப்பு, சர்க்கரை கரைசல் நீர் வழங்கப்பட்டது.

