/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு உதவித்தொகை
/
பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு உதவித்தொகை
ADDED : ஜூன் 11, 2024 01:19 AM
கோத்தகிரி:கோத்தகிரியில், பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு, உதவித்தொகை வழங்கப்பட்டது.
கோத்தகிரி ஈளாடா பகுதியில் அமைந்துள்ள சிவகாமி எஸ்டேட் குழுமத்தின் தலைவர் சிவக்குமார். இவர், கல்வி உள்ளிட்ட, சமூக சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், தனது பிறந்த நாளன்று, கோத்தகிரி வட்டாரத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதித்த, 57 மாணவர்களுக்கு, தலா 5,000 ரூபாய், பிளஸ்-2 மாணவர்கள், 27 பேருக்கு தலா 7,500 ரூபாய் வழங்கினார்.
தவிர, கோத்தகிரி வட்டார அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு மேற்படிப்புக்காக கல்வி உதவித்தொகை வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், 'கோத்தகிரியில் உள்ள, 18 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு, உதவி தொகை வழங்கப்பட்டது. தவிர, பிளஸ்-2 தேர்வில், முதல் மூன்று இடங்ளை பிடித்த ஏழை எளிய மாணவர்களுக்கு மேற்படிப்புக்கான உதவிகள் செய்துதரப்படும். மேற்படிப்பு பயில வசதியில்லாத, 6 மாணவர்களுக்கு முழு தொகையையும் ஏற்று படிக்க வைக்க உள்ளோம்,' என்றார்.