/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு சிறப்பு கூட்டம்
/
பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு சிறப்பு கூட்டம்
பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு சிறப்பு கூட்டம்
பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு சிறப்பு கூட்டம்
ADDED : ஆக 29, 2024 10:02 PM
கோத்தகிரி: கோத்தகிரி தெங்குமரஹாடா அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு சிறப்பு கூட்டம்நடந்தது.
கூட்டத்திற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் வினோதினி தலைமை வகித்து, பள்ளி மேலாண்மை குழுவின் நோக்கம், செயல்பாடு மற்றும் பள்ளி முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதன் அவசியம் குறித்துபேசினார்.
தெங்குமரஹாடா ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வம் மற்றும் வார்டு உறுப்பினர் கனகா ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
தெங்குமரஹாடா, அல்லிமாயார் மற்றும் கல்லம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, முன்னாள் பி.டி.ஏ., நிர்வாகிகள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்று, புதிய நிர்வாகிகளை தேர்வுசெய்தனர்.
அதில், பள்ளி மேலாண்மை குழு தலைவராக அம்பிகா, துணைத் தலைவராக ரவிக்குமார்மாநிலத் திட்ட அலுவலகம் சார்பில், சிறப்புமேற்பார்வையாளராக வீரப்பன் ஆகியோருடன், 24 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தொடர்ந்து, உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஆசிரியர் கார்த்திக் நன்றி கூறினார்.

